புளியில்லா முருங்கைக்கீரை குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 3 தேக்கரண்டி

முருங்கைக்கீரை - 2 கப் (ஆய்ந்து சுத்தம் செய்தது)

முருங்கைக்காய் - 2

அவரைக்காய் அல்லது கத்தரிக்காய் - 200 கிராம்

தேங்காய்ப் பூ - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி

கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா 1/2 தேக்கரண்டி

வறுத்து அரைக்க:

மிளகு - 1 தேக்கரண்டி,

சீரகம் - 1 தேக்கரண்டி,

பச்சரிசி - 1 தேக்கரண்டி,

துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி

வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

சிவப்பு மிளகாய் - 2

செய்முறை:

வறுக்கக் கொடுக்கப் பட்டிருக்கும் பொருட்களை சிறிது எண்ணெய் ஊற்றி, வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

தேங்காய்ப் பூவை தனியாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும். முருங்கைக்காய், கத்தரிக்காயை நறுக்கி வைக்கவும்.

குக்கரில் வறுத்த பாசிப்பருப்பையும், முருங்கைக்கீரையையும் தனித்தனி கிண்ணங்களில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

வறுத்து வைத்துள்ள பொருட்களை அரைக்கவும். தேங்காய்ப் பூவை தனியாக அரைத்து எடுக்கவும்.

அரைத்த மசாலாவை 2 கப் தண்ணீர் ஊற்றிக் கரைத்துக் கொள்ளவும்.

இதில் வெந்த காய்கள், கீரையை சேர்க்கவும்.

நன்கு இரண்டு முறை பொங்கி வந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காயை கரைத்து விடவும்.

உப்பு சேர்க்கவும். கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளித்துக் கொட்டி பரிமாறவும்.

குறிப்புகள்: