புளிச்சாறு
தேவையான பொருட்கள்:
புளி - பெரிய எலுமிச்சம்பழம் அளவு
சின்ன வெங்காயம் - 12
பூண்டு - 2 பல்
பச்சை மிளகாய் - 3
சிவப்பு மிளகாய் - 2
உப்பு - சுவைக்கேற்ப
தாளிக்க:
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
புளியை ஊற வைத்துக் கரைத்துக் கொள்ளவும். அதில் உப்பு போடவும்.
பூண்டு ஒன்றிரண்டாகத் தட்டி வைத்துக் கொள்ளவும்.
சிவப்பு மிளகாய் சிறிய துண்டுகளாகக் கிள்ளி வைக்கவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் - பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு உளுத்தம்பருப்பு வெந்தயம் போட்டு, வெடித்ததும், தீயைக் குறைத்துக் கொண்டு, சிவப்பு மிளகாயை சேர்க்கவும்.
மிளகாய் லேசாக சிவந்ததும், அரிந்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு, வதக்கவும்.
கறிவேப்பிலை சேர்க்கவும். கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீரை சேர்க்கவும்.
தட்டி வைத்துள்ள பூண்டை அதில் போடவும்.
பச்சை வாசனை போகக் கொதித்ததும் இறக்கி வைக்கவும்.
இது ரொம்பக் கெட்டியாகவும் இல்லாமல், ரசம் போல நீர்க்கவும் இல்லாமல், மீடியமாக இருக்கும்.