புளிசேரி (இடியாப்பத்திற்கு)
தேவையான பொருட்கள்:
அரைக்க:
தேங்காய் துருவல் - 3/4 கப்
பச்சை மிளகாய் - 2 அல்லது 3 (காரத்திற்கேற்ப)
பூண்டு - 1 பெரிய பல்
சீரகம் - 1/2 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 1
கறிவேப்பிலை - 1 இனுக்கு
தயிர் - 1/2 முதல் 3/4 கப் (புளிப்பிற்கு எற்ப)
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரைக்க வேண்டிய பொருட்களை தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும்
வாணலியில் எண்ணெய் சூடாக்கி தாளிக்க வேண்டியவற்றை தாளித்து அரைத்த தேங்காய் கலவை,உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து சூடாக்கவும்.
ஒரு கொதி வந்ததும் இறக்கி ஆற விடவும்.
லேசான சூட்டுடன் இருக்கும் போதே தயிரை கட்டியில்லாமல் அடித்து சேர்த்து கலக்கவும்.
தயிர் சேர்க்கும் போது முதலில் 1/2கப் கலந்து பின் புளிப்பு போதவில்லை யென்றால் மீதியை சேர்த்து பரிமாறவும்.