புளிசேரி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெள்ளை பூசணி - 1 துண்டு

தயிர் - 1/2 கப் (மிதமான புளிப்பில்)

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

தேங்காய் துருவல் - 1/2 கப்

பச்சை மிளகாய் - 2

சீரகம் - 1/2 தேக்கரண்டி

பூண்டு - 1 சிறிய பல்

தாளிக்க:

எண்ணெய் - 1 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 1

கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

வெள்ளை பூசணியை 1 செ.மீ அளவுள்ள துண்டுகளாக்கி உப்பு சேர்த்து வேக விடவும்.

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மையாக அரைக்கவும். காய் வெந்ததும் அரைத்த கலவையை போட்டு கொதிக்கவிடவும்.

பச்சை வாசனை போனதும் இறக்கி ஆற விடவும். தாளிக்க வேண்டியவற்றை தாளித்து சேர்க்கவும்.

ஆறியதும் தயிரை நன்றாக அடித்து சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்:

உப்பு தேவைப்பட்டால் சேர்க்கவும்.