புளிக்குழம்பு (1)
0
தேவையான பொருட்கள்:
புளி - எலுமிச்சை அளவு
துருவிய தேங்காய் - 3/4 கப்
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 1/2 தேக்கரண்டி
தனியாத் தூள் - 1 தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு கடாயில் நல்லெண்ணெய் சிறிது ஊற்றி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, பூண்டைப் போட்டு வதக்கவும்.
பிறகு அதில் புளியைக் கரைத்து ஊற்றி மிளகாய்ப் பொடி, தனியாத் தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிக்க ஆரம்பித்தவுடன் தேங்காய் மற்றும் சீரகத்தை அரைத்து அதில் விடவும்.
குழம்பு நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்..