புளிக்குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் வற்றல் - ஒரு கைப்பிடி

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 2

புளி - ஒரு எலுமிச்சை அளவு

வரமிளகாய் - 1

பூண்டு - 5 பல்

கொத்தமல்லி தழை - சிறிது

தாளிக்க:

கடுகு - சிறிது

கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி

உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி

சீரகம் - 1 மேசைக்கரண்டி

அரைக்க:

சீரகம் - 2 மேசைக்கரண்டி

சோம்பு - 1 மேசைக்கரண்டி

மிளகு - 1 1/2 மேசைக்கரண்டி

மல்லி - 1 மேசைக்கரண்டி

வெந்தயம் - 1 மேசைக்கரண்டி

பெருங்காயம் - சிறிது

வரமிளகாய் - 2

பூண்டு - 5 பல்

கறிவேப்பிலை - 6 இதழ்

செய்முறை:

வெங்காயம், தக்காளி, பூண்டு மற்றும் மல்லி தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வரமிளகாயை இரண்டாக கிள்ளிக் கொள்ளவும். புளியை ஊற வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் அரைக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து ஆறிய பின் அரைத்துக் கொள்ளவும்.

அதே பாத்திரத்தில் மீண்டும் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும். நன்கு தாளித்ததும், பூண்டு மற்றும் கத்தரிக்காய் வற்றல் சேர்த்து வதக்கவும்.

பின்னர் ஒரு வரமிளகாய் மற்றும் பெரிய வெங்காயத்தை சேர்த்து சிறிது உப்பு போட்டு நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும்

இப்போது தக்காளி சேர்த்து குழைந்து வரும்படி வதக்கவும்.

நன்கு அனைத்தும் ஒன்று சேர்ந்து வதங்கியதும், அரைத்து வைத்துள்ளவற்றை சேர்த்து நன்கு பிரட்டவும்.

ஐந்து நிமிடம் நன்கு வதக்கி, கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு பரிமாறவும்.

குறிப்புகள்:

வேண்டுமெனில் மல்லி தழை சேர்த்து இறக்கலாம்.

கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் சுவையாக இருக்கும்.