புடலங்காய் குழம்பு
தேவையான பொருட்கள்:
பிஞ்சு புடலங்காய் - 1
மஞ்சள் தூள் - சிறிதளவு
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம், சோம்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
வெங்காயம் - பாதி
பூண்டு - 6 பல்
தக்காளி -2
மெட்ராஸ் கறித்தூள் - 2 தேக்கரண்டி
தேங்காய் பால் + பசுப்பால் (ஆவின்பால்) - 1 கப்
தண்ணீர் - 1/2 கப்
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். புடலங்காயை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், சோம்பு, பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை, புடலங்காய் போட்டு சுருள வதக்கவும். பின்பு மஞ்சள் தூள், மெட்ராஸ் கறித்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து சுருள வதக்கவும்.
அனைத்தும் சுருள வதங்கியதும் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து கிளறி கொதிக்க விடவும்.
கலவை கொதித்து கெட்டியானதும் கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கி பரிமாறவும்.
மெட்ராஸ்கறித்தூள் செய்ய: (இவையனைத்தையும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.)
வெறும் மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி,
மிளகு, சீரகம், சோம்பு - தலா 1/4 தேக்கரண்டி