பிரண்டை கடைசல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பிரண்டை - ஒரு பிடி

துவரம் பருப்பு - ஒரு பிடி

வெங்காயம் - 1/2

தக்காளி - 1

காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4

பூண்டு - 3 அல்லது 4 பல்

புளி - நெல்லிக்காய் அளவு

வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - வதக்க

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 1/4 தேக்கரண்டி

சீரகம் - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - தாளிக்க

செய்முறை:

பிரண்டையை கழுவி,சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி,வெங்காயம்,பூண்டு,துவரம் பருப்பு,காய்ந்த மிளகாய்,வெந்தயம்,பிரண்டை துண்டுகள் சேர்த்து நன்கு வதக்கவும்.

பிரண்டை நன்கு வதங்க வேண்டும்.இல்லையெனில்,சாப்பிடும் போது நாக்கு அரிக்கும்.

வதங்கியதும், அதனுடன் தக்காளி, புளி, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, நன்கு வேக வைக்கவும்.

வெந்ததும், காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு, தக்காளி, புளி சேர்த்து நன்கு அரைக்கவும். பின், துவரம் பருப்பு மற்றும் பிரண்டை சேர்த்து அரைக்கவும்.

ஒரு கடாயில், கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து அரைத்த கடைசலில் சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்:

இந்த கடைசல் வெறும் சாதத்துடன் சாப்பிடலாம்.