பிடிகருணை குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பிடிகருணை - 3

வெங்காயம் - 1

தக்காளி - 2

துருவிய தேங்காய் - 1/2 கப்

சோம்பு - 1/2 தேக்கரண்டி

குழம்பு மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி

பச்சைமிளகாய் - 1

புளி - எலுமிச்சை பழம் அளவு

கறிவேப்பிலை - ஒரு கொத்து

நல்லெண்ணை - 1 சின்ன குழிகரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

பொடியாக அரிந்த சாம்பார் வெங்காயம் - 5

கடுகு - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை:

பிடிகருணையை தோலுடன் பிரஷர் குக்கரில் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.

வெந்த கிழங்கின் தோலை நீக்கிவிட்டு சின்ன துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

புளியில் தண்ணீர் சேர்த்து கரைத்து வடித்து வைக்கவும்.

வெங்காயம், தக்காளி, துருவிய தேங்காய், சோம்பு எல்லாம் ஒன்றாக சேர்த்து மை போல் அரைத்து புளித்தண்ணீரில் கலந்து, அதில் பச்சை மிளகாய், குழம்பு மிளகாய்த்தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து அடுப்பில் ஏற்றி கொதிக்கவிடவும்.

தனியே ஒரு கடாயில் நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்தவுடன், கடுகு, சாம்பார் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

அதில் வேக வைத்த பிடிகருணையை சேர்த்து வதக்கி, குழம்பு கெட்டியான பதம் வந்தவுடன் அதில் சேர்த்து இரண்டு கொதி வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: