பால் குழம்பு (1)
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
தனியா - 1 தேக்கரண்டி
கசகசா - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 6 (அல்லது) 7
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
வெல்லம் - பாக்களவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
புளி - ஒரு எலுமிச்சை அளவு
தேங்காய் - 1
கத்தரிக்காய் - 1/4 கிலோ
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
பட்டை - 1
இலவங்கம் - 1
செய்முறை:
ஒரு கடாயில் பருப்புகள், மிளகாய், தனியா, வெந்தயம், கசகசா ஆகியவற்றை தனித்தனியே வறுத்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
தேங்காயை முதல்பால், இரண்டாம்பால், மூன்றாம்பால் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை தாளித்து, நீளவாக்கில் நறுக்கிய கத்தரிக்காய், உருளைக்கிழங்கு போட்டு வதக்கி, மஞ்சள் தூள் சேர்த்து மூடி வேக விடவும்.
புளியைக் கரைத்து ஊற்றி அரைத்த மசாலா, உப்பு சேர்த்து கொதிக்கவிட வேண்டும். 10 நிமிடம் கழித்து 3-ம் பாலை ஊற்றி கொதிக்கவிடவும்.
5 நிமிடம் கழித்து 2- ம் பாலை ஊற்ற வேண்டும். கடைசியாக முதல் பாலை ஊற்றி கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.