பால் குழம்பு





தேவையான பொருட்கள்:
பச்சை மிளகாய் - 4
சோம்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் - 1
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
பொடியாக அரிந்த சிறிய வெங்காயம் - 1 கப்
பொடியாக அரிந்த தக்காளி - 2 கப்
பிஞ்சு கத்தரிக்காய் - 8
கறிவேப்பிலை - ஒரு கை
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேங்காயைத் துருவி முதல் பால், இரண்டாம் பால் எடுக்கவும்.
பச்சை மிளகாய், சீரகம், சோம்பு இவற்றை மையாக அரைத்து இரண்டாம் பாலில் கலக்கவும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி, சேர்த்து மஞ்சள் தூளுடன் வதக்கவும்.
அரைத்த மசாலா கலந்த இரண்டாம் பாலை ஊற்றி கத்தரிக்காய்த்துண்டுகளுடன் போதுமான உப்பும் சேர்த்துப் போட்டு வேக வைக்கவும்.
காய் வெந்ததும் முதல் பாலை ஊற்றிக் கலந்து கொதிக்க ஆரம்பித்ததும் இறக்கி பரிமாறவும்.