பாசி பயறு குழம்பு





தேவையான பொருட்கள்:
பாசி பயறு - 1 கப்
சின்ன வெங்காயம் - 13
பூண்டு - 6 பல்
தக்காளி - 1 சிறியது
சாம்பார் பொடி - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
புளி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் -1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 பின்சு
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
செய்முறை:
பாசி பயறை நன்கு கழுவி விட்டு குக்கரில் 3 விசில் விட்டு வேக வைக்கவும்.
பின்னர் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.
பின்னர் வெங்காயம்,பூண்டு போட்டு வதக்கவும். அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.
வதக்கிய பொருட்களை குக்கரில் போட்டு மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்து,சிறிது உப்பு போட்டு மேலும் 3 விசில் விடவும்.
இறக்கிய பின் சிறிது புளி பிழிந்து ஒழிக்கவும்.
ஒரு கொதி விட்டு இறக்கி பறிமாறவும்.