பாகற்காய் குழம்பு (6)
தேவையான பொருட்கள்:
பாகற்காய் - 2
வெங்காயம் - 1
தக்காளி - 1
சாம்பார் பொடி - 3 தேக்கரண்டி
வெல்லம் - 6 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
உளுந்து - 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பாகற்காய், வெங்காயம், தக்காளி அனைத்தையும் நறுக்கி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
இதில் நறுக்கின வெங்காயம், பாகற்காய், தக்காளி அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், சாம்பார் பொடி சேர்த்து லேசாக பிரட்டவும். இதில் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
கடைசியாக வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி குழம்பில் சேர்த்து ஒரு கொதி விட்டு எடுத்து பரிமாறவும்.