பாகற்காய் குழம்பு (5)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாகற்காய் - 3

தக்காளி - 2

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 1

பூண்டு - 4 பல்

புளி - ஒரு எலுமிச்சை அளவு

ஆச்சி குழம்பு மசாலா - 4 தேக்கரண்டி

வடகம், எண்ணெய், கறிவேப்பிலை - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பாகற்காயை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வதக்கவும்.

பாகற்காய் நன்கு முறுகலாக சிவந்து வரும் வரை வதக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் புளியை கரைத்து ஊற்றி அதில் தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, ஆச்சி மசாலா, உப்பு போட்டு பிசைந்து கலந்து வைத்து அடுப்பில் கொதிக்க வைக்கவும்.

குழம்பு கொதித்து கெட்டியானவுடன் அதை வறுத்த பாகற்காயில் ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.

பின் சட்டியில் எண்ணெய் ஊற்றி வடகம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை போட்டு சிவக்க வதக்கவும். பாகற்காய் குழம்பை தாளித்ததில் ஊற்றி அடுப்பை நிறுத்தி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

சூடான சாதத்துடன் ஊற்றி சாப்பிட பாகற்காய் குழம்பு தயார்.