பாகற்காய் குழம்பு (3)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாகற்காய் - 2

பெரிய வெங்காயம் - 1

கறிவேப்பிலை - சிறிது

புளி - 1 நெல்லிக்காய் அள்வு

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

வெல்லம் - 2 மேசைக்கரண்டி

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

வதக்கி அரைக்க:

தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி

உளுந்து - 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 3

தனியா - 1 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - 7

தக்காளி - 1

கறிவேப்பிலை - சிறிது

தாளிக்க:

கடுகு, வெந்தயம் - சிறிது

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, தனியா, மிளகாய் வற்றல் சேர்த்து சிவக்க வறுக்கவும்.

இதில் நறுக்கிய சின்ன வெங்காயம், தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.

இந்த கலவையை ஆற வைத்து மிக்ஸியில் தேவைக்கு நீர் விட்டு நைசாக அரைக்கவும்.

புளியை ஊற வைத்து கரைத்து வைக்கவும்.

வெல்லம் நீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம் தாளித்து, அதில் நறுக்கிய வெங்காயம், கறீவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் நறுக்கிய பாகற்காய் சேர்த்து வதக்கவும்.

இத்துடன் அரைத்த மசாலா சேர்த்து தேவையான நீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மூடி வேக விடவும்.

பின் புளி கரைசல் சேர்த்து எண்ணெய் பிரிய கொதிக்க விட்டு கடைசியாக வெல்லம் கலந்த நீர் விட்டு ஒரு கொதி விட்டு எடுக்கவும்.

குறிப்புகள்: