பாகற்காய் குழம்பு
தேவையான பொருட்கள்:
பாகற்காய் - 2
பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிது
புளி - ஒரு நெல்லிக்காய் அள்வு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
வெல்லம் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வதக்கி அரைக்க:
தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 3
தனியா - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 7
தக்காளி - 1
கறிவேப்பிலை - சிறிது
தாளிக்க:
கடுகு, வெந்தயம் - சிறிது
செய்முறை:
பாகற்காயை வட்டமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தை மெல்லிய வட்டமான துண்டாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, தனியா, மிளகாய் வற்றல் சேர்த்து சிவக்க வறுக்கவும்.
அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் தக்காளி சேர்த்து வதக்கவும். இந்த கலவையை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைக்கவும்.
புளியை ஊற வைத்து கரைத்து வைக்கவும். வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம் தாளித்து, அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய பாகற்காய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் மற்றும் பாகற்காயுடன் அரைத்த மசாலா சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மூடி வேக விடவும்.
பின்னர் அதில் புளிக்கரைசல் சேர்த்து எண்ணெய் பிரிய கொதிக்க விட்டு கடைசியாக வெல்லம் கலந்த நீர் ஊற்றி ஒரு கொதி விட்டு இறக்கி பரிமாறவும்