பஸ்ஸாரு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரை கீரை - 1 கப்

சிறு கீரை - 1 கப்

சோம்பு இலை (Dill weeds) - 1 கப்

பீன்ஸ் - 100 கிராம்

துவரம் பருப்பு - 100 கிராம்

பச்சை மிளகாய் - 2

வெங்காயம் - 1

தக்காளி - 1

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

தனியா தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

கடுகு - 1/4 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரைக்கீரை, சிறுக்கீரை மற்றும் சோம்பு கீரையை சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும்.

கீரை வகைகளை பீன்ஸ் சேர்த்து வேக வைக்கவும்.

பருப்பை தனியாக வேக வைத்து எடுக்கவும். ரொம்ப குழைய வேண்டாம்.

வேகவைத்த கீரை தண்ணியை தனியாக வைக்கவும்.

வெங்காயம், தக்காளி, மிளகு, சீரகத்தை தனித்தனியாக வறுத்தெடுத்து வேகவைத்த பருப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்.

கீரை வேகவைத்த தண்ணீருடன் அரைத்தவைகளை சேர்த்து மிளகாய்தூள், மஞ்சள்தூள், தனியாதூள், புளி தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும். பிறகு அதை நன்கு கொதிக்க வைக்கவும்.

பின்பு கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.

குறிப்புகள்: