பரோட்டா குழம்பு
தேவையான பொருட்கள்:
பட்டை - 1
லவங்கம் - 3
சோம்பு - 1/2 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி - சிறிது
வெங்காயம் - 2
கறிமசாலா - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க தேவையானவை:
பட்டை - 2
லவங்கம் - 4
சோம்பு - 2 தேக்கரண்டி
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 5
தேங்காய் துருவல் - 1/2 கப்
வெங்காயம் - சிறிது
தக்காளி - 2 அல்லது 3
தனியாக அரைக்க:
பொட்டுக்கடலை - 5 தேக்கரண்டி
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம், சோம்பு, ஏலக்காய் பொடி, வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்து நன்கு மூடி வைத்து கொதிக்க விடவும்.
கறிமசாலாவை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
கடைசியில் பொட்டுக்கடலை விழுதை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கறிவேப்பிலை, நல்லெண்ணெய் சேர்த்து பரிமாறவும்.