பருப்பு புளிக்கறி

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 1/2 கப்

கத்திரிக்காய் - 2

துருவிய தேங்காய் - 1/4 கப்

சின்ன வெங்காயம் - 3

சீரகம் - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை -1 கொத்து

புளி - 1 நெல்லிக்காய் அளவு

உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு:

எண்ணெய் - 1 தேக்கரண்டி

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 2

வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

பருப்பை குக்கரில் வேக வைத்து மசித்து கொள்ளவும். கத்திரிக்காயை சிறு துண்டுகளாக்கவும்.

தண்ணீரில் உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கத்திரிக்கயை வேக விடவும்.

தேங்காய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகம், சின்ன வெங்காயம் ஆகியவற்றை நீர் சேர்த்து மையாக அரைக்கவும். புளியை கரைத்து வைக்கவும்.

காய் வெந்ததும் வேகவைத்து மசித்த பருப்பு, அரைத்த மசாலா, புளிக்கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்து பச்சை வாசனை போனதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

தாளிக்க சொன்ன பொருட்களை தாளித்து குழம்பில் கொட்டி கலக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: