பருப்பு உருண்டை குழம்பு (2)
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1 கப்
கடலைப்பருப்பு - 1 கைப்பிடி
வற்றல் மிளகாய் - 4
புளி - ஒரு சிறிய ஆரஞ்சு அளவு
மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தூள் - 3 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கை
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 2 மேசைக்கரண்டி
வெந்தயப்பொடி - 2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - ஒரு கை
பொடியாக நறுக்கிய பூண்டு -2 மேசைக்கரண்டி
முருங்கைக்காய் - 3
சிறிய வெங்காயம் - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2
பொடியாக நறுக்கிய தக்காளி - 1 1/2 கப்
சோம்பு - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 6 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
புளியை 2 கப் நீரில் ஊறவைத்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
பருப்புக்களை தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
அடுப்பில் ஒரு அகன்ற பாத்திரத்தை வைத்து எண்ணையை ஊற்றவும்.
அது சூடானதும் சிறிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
பிறகு தக்காளியை மஞ்சள் தூளுடன் சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும்.
தீயை குறைவாக வைத்து வெந்தயத்தூளைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
இப்போது புளித் தண்ணிரைச் சேர்த்து தூள்கள், தகுந்த உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
குழம்பு தண்ணீராக இருக்கவேண்டும்.
முருங்கைக்காய் துண்டுகளைப்போட்டு வேக விடவும்.
பருப்புகளை உப்பு, மிளகாய் வற்றல், சோம்புடன் சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, சிறிது மஞ்சள் தூள், தேங்காய்த்துருவல் இவற்றைச் சேர்த்துக் கலக்கவும்.
சிறிய உருண்டைகள் செய்து கொள்ளவும்.
கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பில் ஐந்து உருண்டைகளைப் போடவும்.
அவை வெந்து மேலெழும்பி வரும்போது மேலும் ஐந்து உருண்டைகளைப் போடவும்.
இதுபோல எல்லா உருண்டைகளையும் போட்டு அவை வெந்ததும் மேலும் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு மிகவும் குறைந்த தீயில் குழம்பை 10 நிமிடங்கள் வைத்திருக்கவும். இறக்கி பரிமாறவும்.