பருப்பு உருண்டைக்குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 200 கிராம்

சின்ன வெங்காயம் - 100 கிராம்

தக்காளி - 2

புளி - எலுமிச்சையளவு

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

மல்லித்தூள் - 3 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

பூண்டு - 4 பல்

சீரகம், சோம்புத்தூள் - 1 தேக்கரண்டி

தேங்காய் - 2 சில்

எண்ணெய் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

வெந்தயம் - 1 தேக்கரண்டி

செய்முறை:

துவரம்பருப்பை ஊற வைக்க வேண்டும். பாதி வெங்காயத்தையும், பூண்டையும் மிகப்பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும்.

பருப்பிலிருக்கும் தண்ணீரை வடித்துவிட்டு அரைக்கவேண்டும். பருப்புடன் நறுக்கியவற்றை சேர்த்து உருண்டை பிடித்து வைக்க வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க உள்ளவற்றை போட்டு பொரிந்தவுடன், மீதி வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி, மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு வதக்கி, புளியை 4 கிளாஸ் தண்ணீரில் கரைத்து விட்டு கொதிக்கவிடவும்.

தேங்காயை நைசாக அரைத்து ஊற்றி கொதிக்கவிடவும். ஒவ்வொரு உருண்டையாக போட்டு வெந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: