பருப்பு ஆணம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிறு பருப்பு - 1/4 கப்

வத்தல் - 3

தேங்காய் பால் - 2 மேசைக்கரண்டி

கருவேப்பிலை - சிறிது

மஞ்சள் தூள் - சிறிது

கடுகு - சிறிது

சோம்பு - சிறிது

சீரகம் - சிறிது

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 5 மேசைக்கரண்டி

பூண்டு - 3 பல்

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிறு பருப்பை வெறும் சட்டியில் போட்டு வறுத்துக்கொள்ளவும்.

பின் அந்த பருப்பை கழுவிவிட்டு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,(சிறிது வெங்காயம் தாளிப்புக்கு எடுத்து வைக்கவும்)வத்தல்(வத்தலை எரியும் அடுப்பில் காட்டி சுட்டு விதைகளையும்,காம்பையும் நீக்கிகொள்ளவும்),மஞ்சள்தூள்,கருவேப்பிலை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.

பருப்பு நன்கு வெந்ததும் அடுப்பில் இருந்த்து இறக்கி நன்கு கடைந்து அத்துடன் தேங்காய் பால் சேர்த்து கலக்கி வைக்கவும்.

பின் அடுப்பில் ஒரு சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு,சீரகம்,சோம்பு போட்டு பொறிந்ததும் கருவேப்பிலை,வெங்காயம்,பூண்டு போட்டு வதக்கி பருப்பை சேர்த்து உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.தேவையானால் சிறிது தண்ணீர் ஊற்றிக்கொள்ளலாம்.சிறிது நேரம் அடுப்பில் வைத்து இருந்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

இதற்க்கு சாதமும் பொறித்த கறி அல்லது பொறித்த மீன் உடன் சாப்பிட சுவையாக இருக்கும்