பருப்பில்லாத சாம்பார்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெங்காயம் -- 2

தக்காளி - 4

பச்சை மிளகாய் - 3

பூண்டு - 4பல்

கடலை மாவு - 2 மேசைக்கரண்டி

மஞ்சப்பொடி - 1/2 தேக்கரண்டி

கறி வேப்பிலை - ஒரு ஆர்க்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணை - 2 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை:

வெங்காயம், தக்காளியை மெல்லிசாக நீளவாக்கில் கட்செய்யவும்.

பச்சைமிளகாய், பூண்டு நறுக்கவும்.

கடாயில் எண்ணை வைத்து கடுகு, பெருங்காயம் தாளித்து காய்கள், பூண்டு மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

காய்கள் நன்கு வதங்கியதும் மஞ்சப் பொடி, உப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்து காய்கள் மிருதுவானதும், கடலை மாவிலொரு கப் தண்ணீரூற்றி கரைத்து அதில் விடவும்.

5 நிமிடம் கொதித்ததும் கறிவேப்பிலை தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: