பரங்கி தேங்காய் பால் குழம்பு
தேவையான பொருட்கள்:
பரங்கிக்காய் - ஒரு துண்டு (250 கிராம்)
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பூண்டு - 5 பல்
கடுகு - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
சீனி - 1/2 தேக்கரண்டி
முதல் தேங்காய் பால் - 1/2 கப்
இரண்டாம் தேங்காய் பால் - 1 கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பரங்கிக்காயை தோல் சீவி சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நீளமாக நறுக்கி வைக்கவும். பூண்டுடன் முக்கால் தேக்கரண்டி அளவு கடுகைச் சேர்த்து இடித்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் பரங்கிக்காயுடன் இரண்டாம் தேங்காய் பால், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இடித்த பூண்டு, தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும்.
காய் நன்கு வெந்ததும் முதல் தேங்காய் பால் மற்றும் சீனி சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்ததும் அடுப்பை அணைத்துவிடவும். (அதிகமாக கொதிக்கவிட வேண்டாம்).
கடாயில் எண்ணெய் ஊற்றி மீதியுள்ள கடுகு, கறிவேப்பிலை தாளித்து குழம்பில் சேர்க்கவும்.
குறிப்புகள்:
இரண்டாம் தேங்காய் பாலுக்கு பதிலாக தண்ணீர் ஊற்றி வேகவிட்டு, இறுதியாக முதல் தேங்காய் பால் சேர்க்கலாம்.
சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.