பரங்கிக்காய் புளிக்குழம்பு (1)
தேவையான பொருட்கள்:
பரங்கிக்காய் - ஒரு துண்டு
சின்ன வெங்காயம் - 20
பூண்டு - 20 பல்
தக்காளி - 3
புளி - ஒரு எலுமிச்சம்பழம் அளவு
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
கடுகு & உளுந்து - 1 மேசைக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - இரண்டு கொத்
வெல்லம் - சிறிய துண்டு
எண்ணை - 5 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
வர மிளகாய் - 20
மல்லி விதை - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
புளியை ஊஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.
பரங்கிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தோல் நீக்க வேன்டாம்.
வெங்காயம் பூண்டை உரித்து வைத்துக் கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வர மிளகாய், மல்லியை வறுத்து விழுதாக அரைத்து ஒரு டம்ளர் தண்ணிரில் கரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணை முழுதும் ஊற்றி கடுகு, உளுந்து, வெந்தயம், சோம்பு போட்டு வெடித்ததும் வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
மூன்று நிமிடம் கழித்து பரங்கிக்காய் துண்டுகள்,தக்காளி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
பிறகு புளிக் கரைசலையும், அரைத்த மசாலா கரைசலையும் ஊற்றி கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்.
நன்கு கெட்டியானதும் வெல்லம் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.