பன்னீர் தால் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பன்னீர் - 1 பாக்கெட்

துவரம் பருப்பு - 1/4 கப்

மைசூர் பருப்பு - 1/4 கப்

கடலைப்பருப்பு - 1 கைப்பிடி

ஊறவைத்த சிந்தாமணி கடலை (கறுப்பு கொண்டைக்கடலை) - 1/4 கப்

வெங்காயம் - 1

புளி - பாக்களவு

மிளகு தூள் - 1 மேசைக்கரண்டி

மல்லித்தூள் - 1 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - 3 சிட்டிகை

கறிவேப்பிலை - 2 நெட்டு

எண்ணெய் - 3 - 4 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பன்னீரை சிறு சதுர துண்டுகளாக வெட்டவும்.

வெங்காயத்தை மெல்லிய நீள துண்டுகளாக வெட்டவும்.

புளியை கரைத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எல்லா பருப்பு, கடலை வகைகளையும் போட்டு அவிய விடவும்.

பருப்பு, கடலை நன்கு அவிந்ததும் உப்பு, மிளகு தூள், மல்லித்தூள் அரைவாசி கறிவேப்பிலை, புளிக்கரைசல் சேர்த்து 5 - 7 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி ஆற விடவும்.

வெங்காயம், மீதி கறிவேபிலையல் எண்ணெயில் போட்டு வதக்கி எடுக்கவும்.

பன்னீர் துண்டுகளிற்கு சிறிது உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டி சிறிது எண்ணெயில் வதக்கி எடுத்து ஒரு பேப்பரில் போடவும். (எண்ணெய் உறிஞ்சுவதற்கு)

பின்னர் ஆறிய பருப்பு கலவையை கிரைண்டரில் போட்டு அரைக்கவும். (அவித்த தண்ணீருடன்).

அரைத்த கவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மீண்டும் கொதிக்க வைத்து அதனுள் வதக்கிய வெங்காய கலவை, பன்னீர் துண்டுகளை போட்டு 2 நிமிடங்கள் பிரட்டி கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

இதனை சப்பாத்தி, சுடுசோறு, ரொட்டி என்பவற்றுடன் பரிமாறலாம்.