பனீர் மக்கன் கிரேவி





தேவையான பொருட்கள்:
கட்டமாக நறுக்கிய பனீர் - 100 கிராம்
பட்டர் - 3 தேக்கரண்டி
தக்காளிப்யூரி - 4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கஸ்தூரிமேத்தி பவுடர் - 1/2 தேக்கரண்டி
கரம்மசாலா தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் தக்காளிப்யூரி ஊற்றி 3நிமிடம் சூடு பண்ணவும்.
பட்டரை சேர்க்கவும். இது கரைந்த பின்பு மிளகாய்த்தூள், கரம்மசாலா, கஸ்தூரிமேத்தி, உப்பு போட்டு கொதி
வரும் போது பனீர் சேர்க்கவும். 5 நிமிடம் கழித்து கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்