பனீர் டிக்கா கிரேவி
0
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 1
தக்காளி - 2
பனீர் - 150 கிராம்
தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சிபூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கரம்மசாலா - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
தயிர் - 1/2 கப்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
பனீரை விரல் நீட்ட அளவுக்கு நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் அரைத்த வெங்காயம், தக்காளி மிளகாய்த்தூள், தனியாத்தூள், சிரகத்தூள், இஞ்சிபூண்டு, கரம்மசாலா போட்டு வதக்கவும்
தயிர் உப்பு போட்டு வதக்கவும்
நன்றாக எண்ணெய் விடும் போது பனீரை சேர்க்கவும்.
மேலே கொத்துமல்லி இலை தூவி பரிமாரவும்.