பத்திய குழம்பு
தேவையான பொருட்கள்:
மஞ்சள் - 2 துண்டு
மிளகாய் வற்றல் - 6
மல்லி - 3 தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
பூண்டு - 100 கிராம்
சுண்டைக்காய் வற்றல் - சிறிது
கத்திரி வற்றல் - சிறிது
மிளகு - 3 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 100
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மஞ்சள், மிளகாய், மல்லி, மிளகு வறுத்து கொண்டு நன்றாக அரைக்க வேண்டும்.
புளியைக் கரைத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு தேவையான அளவு போட்டு கலக்கவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு கத்திரிவற்றல், சுண்டைவற்றல் ஆகியவற்றைப் பொன் நிறமாக வறுத்து கரைத்து வைத்துள்ள குழம்பில் சேர்க்கவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு வெந்தயம் போட்டு சிவந்ததும், உரித்த பூண்டை போட்டு வதக்கவும்.
வதங்கியவுடன் அதில் கரைத்த குழம்பை ஊற்றவும். குழம்பு நன்றாக கொதித்து எண்ணெய் மேலே மிதந்து வந்ததும் இறக்கி பரிமாறவும்.