பட்டாணி குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சை பட்டாணி - 100 கிராம்

சிறிய வெங்காயம் - 15

தக்காளி - 2 (சிறிய அளவில்)

கறிவேப்பிலை - 2 இனுக்கு

சீரகம் - 1 தேக்கரண்டி

சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி

தேங்காய் துருவல் - 1/2 கப்

தாளிக்க:

எண்ணைய் - 1/4 கப்

கடுகு - சிறிதளவு

உளுத்தம்பருப்பு - சிறிதளவு

வட்டமாக நறுக்கிய சிறிய வெங்காயம் - 10

கறிவேப்பிலை - 1 இனுக்கு

செய்முறை:

வாணலியில் எண்ணைய் கொஞ்சம் ஊற்றி சிறிய வெங்காயம் , போட்டு சிறிது வெந்தபின் தக்காளி போட்டு சீரகம்,கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

பின் சாம்பார் பொடி போட்டு கொஞ்சம் எண்ணைய் ஊற்றி 1 நிமிடம் வதக்கவும்.

இதனுடன் தேங்காய் துருவலையும் சேர்க்கவும்.

இதனை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.

மீதியுள்ள எண்ணையை வாணலியில் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து சிறியவெங்காயம் , கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

பட்டாணியையும் சேர்த்து 3 நிமிடம் சேர்த்து வதக்கவும்.

பின் அரைத்த மசாலாவை வாணலியில் ஊற்றவும்.பின் இதனுடன் உப்பு சேர்க்கவும். 5 நிமிடம் வேகத்து பரிமாறவும்.

குறிப்புகள்: