பட்டாணிக்குழம்பு
தேவையான பொருட்கள்:
பட்டாணி - 100 கிராம்
வெங்காயம் - 10
பூண்டு - 5 பல்
தக்காளி - 4 (100 கிராம்)
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 4 தேக்கரண்டி
சீரகம், சோம்புத்தூள் - 1 தேக்கரண்டி
தேங்காய் - 4 சில்
கசகசா - 1 தேக்கரண்டி
பட்டை - 1
கிராம்பு - 1
இலை - சிறிது
அன்னாசிப்பூ - சிறிது
சோம்பு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதல் நாள் இரவே பட்டாணியை ஊறப் போட வேண்டும். ஒரு குக்கரில் பட்டாணியும், உப்பும் போட்டு ஒரு விசில் வைக்கவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, இலை, அன்னாசிப்பூ, சோம்பு, வெந்தயம் தாளித்து, பூண்டு, வெங்காயம், தக்காளி போட்டு வதக்கிய பின் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பட்டாணியை தண்ணீருடன் ஊற்றி, மேலும் நீர் வேண்டும் என்றால் ஊற்றி கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்தவுடன் தேங்காய், கசகசா, ஒரு பல் பூண்டு சேர்த்து அரைத்து குழம்பில் ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.