பச்சை மொச்சை குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சை மொச்சை - 1/2 கிலோ

சின்ன வெங்காயம் - 1 கப்

பச்சை மிளகாய் - 1

சிறிய நன்றாக பழுத்த தக்காளி - 2

கறிவேப்பிலை - 3 இனுக்கு

தேங்காய் - 1 1/2 பத்தை

சாம்பார் தூள் - 1 1/2 தேக்கரண்டி

தாளிக்க:

பட்டை - 1 துண்டு

கடுகு, உளுந்து - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

வாணலியில் சிறிது எண்ணைய் ஊற்றி வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, சாம்பார் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

வதக்கியதுடன் தேங்காய் சேர்த்து அரைக்கவும்.

பச்சை மொச்சையை வெங்காயம், பச்சை மிளகாயுடன் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.

பின் வாணலியில் எண்ணைய் ஊற்றி பட்டை தாளித்து கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு வேகவைத்த மொச்சையுடன் அரைத்த கலவையையும் சேர்த்து கலக்கி ஒரு கொதி வந்ததும் 1 ஸ்பூன் நல்லெண்ணைய் ஊற்றி குழம்பு காய்ந்ததும் இறக்கி பறிமாறவும்.

குறிப்புகள்: