பச்சை மொச்சைக்குழம்பு
தேவையான பொருட்கள்:
பச்சை மொச்சை - 200 கிராம்
வெங்காயம் - 50 கிராம்
பூண்டு - 6 பல்
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 4
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மல்லி தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
சோம்பு, சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
பட்டை - 1
கிராம்பு - 1
சோம்பு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் - 2 சில்லு
புளி - ஒரு கொட்டைப்பாக்களவு
செய்முறை:
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மொச்சை பயறை உப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடித்து வைக்கவும்.
தேங்காயுடன் ஒரு பூண்டு பல் சேர்த்து அரைத்து வைக்கவும்
கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, சோம்பு, கிராம்பு, வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்.
அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கி மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
புளியை 2 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வதக்கியவற்றுடன் ஊற்றி வேக வைத்த பச்சை மொச்சை, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
குழம்பு கொதித்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க விட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்.