பச்சை பட்டாணி கிரேவி
தேவையான பொருட்கள்:
பச்சை பட்டாணி - 1 1/2 கப்
வெங்காயம் - 1/4 கிலோ
பச்சை மிளகாய் - 3
கருவா - ஒரு துண்டு
ஏலம் - 2
கிராம்பு - 2
இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தக்காளி - 1
மஞ்சள் தூள் - சிறிது
மசாலா தூள் - சிறிது
எண்ணெய் - தாளிப்புக்கு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பச்சை பட்டாணியை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து தோலை நீக்கிகொள்ளவும்.
வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிகொள்ளவும்.
பின் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கருவா,ஏலம்,கிராம்பு போட்டு தளித்து பின் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து,பின் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
பின் தக்காளியை சேர்த்து வதக்கி,மஞ்சள் தூள், மசாலாதூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.வெங்காயம்,தக்காளி நன்கு வதங்கியதும் பச்சை பட்டாணியை போட்டு வதக்கவும்.
பட்டாணியில் நன்கு மசாலா அனைத்தும் சேர்ந்ததும் கிரேவி போல் ஆனதும் இறக்கி பரிமாறவும்.