பச்சைமிளகாய் பருப்பு குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 2

கருவடாம் - 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 6

துவரம் பருப்பு - 2 கப்

கறிவேப்பிலை - 10 இலை

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

பூண்டு - 5 பல்

புளி - எலுமிச்சை அளவு

கொத்தமல்லி - 1/2 கப்

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், தக்காளியை நறுக்கி கொள்ளவும். குக்கரில் பருப்பு, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள் தூள் ஆகியவற்றை போட்டு 4 கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கருவடாமை போடவும்.

வெடித்ததும் கறிவேப்பிலை போட்டு, அதில் வேகவைத்த பருப்பு கலவையை ஊற்றவும்.

புளியை கெட்டியாக கரைத்து அதில் ஊற்றவும். கொதி வந்ததும் கொத்தமல்லி போட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: