பச்சைப்பயிறு (பாசிப்பயிறு) கடைசல்
தேவையான பொருட்கள்:
பச்சைப்பயிறு (பாசிப்பயிறு) - 200 கிராம்
சிறிய வெங்காயம் - 15
தக்காளி - 1
காய்ந்த மிளகாய் - 5
தனியா- 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
கடுகு - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சைப்பயிறை லேசாக வறுத்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பயிறை குக்கரில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து 5 அல்லது 6 விசில் விட்டு வேக வைக்கவும்.
வெந்த பயிறை மத்தால் நன்கு மசித்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
தனியா, சீரகத்தை ஒன்றிரண்டாக பொடித்து, பூண்டை நசுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, பொடித்த தனியா, சீரகம், நசுக்கிய பூண்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி நன்கு கரைந்த பின், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மசித்த பயிறு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கி பரிமாறவும்.