பச்சைப்பயறு குழம்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சைபயறு - 1 கப்

முருங்கைக்காய் - 4

பச்சை மிளகாய் - 2

தக்காளி - 1

மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி

சீரகப்பொடி - 1 தேக்கரண்டி

சோம்பு பொடி - 1 தேக்கரண்டி

சோம்பு - 1/2 தேக்கரண்டி

வெங்காயம் - 1 1/2

பசு நெய் - 25 கிராம்

தேங்காய் - 1/2 கப்

மிளகாய்பொடி - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 2 கொத்து

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பயரை லேசாக வறுத்து திருவையில் உடைத்து தோல் நீக்கி கொள்ளவும். இல்லையெனில் தோல் நீக்கிய பயறை லேசாக வறுத்துக்கொள்ளவும்.

பின்பு கழுவி குக்கரில் போட்டு அதில் ஒரு வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவற்றை நறுக்கி போட்டு 4 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.

முருங்கைக்காயை விரல் நீளத்திற்கு நறுக்கி இரண்டாக நறுக்கி கொள்ளவும், பாதி வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

மேலும் வெந்த பருப்பில் காய்களை போடவும். அதில் மஞ்சள்பொடி, சீரகப்பொடி, சோம்பு பொடி, உப்பு ஆகியவற்றை போடவும்.

காய் நன்கு வேகவிடவும். பின்பு தேங்காயை அரைத்து குழம்பில் சேர்க்கவும், சோம்பை நசுக்கி கொள்ளவும்.

ஒரு வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் அதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். பொன்னிறமானதும் அதில் சோம்பைப் போட்டு வதக்கி அதில் மிளகாய்பொடி சேர்க்கவும்.

பின்பு அதில் கறிவேப்பிலை சேர்த்து கிளறி குழம்பில் கொட்டி கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: