பச்சைப்பயறு குழம்பு





தேவையான பொருட்கள்:
பச்சைப்பயறு - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 12
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
புளி - சின்ன எலுமிச்சை அளவு
சீரகம் - 1 தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
பாசிப்பயறை சிறு தீயில் வாசனை வரும்வரை வறுக்கவேண்டும். பயறில் 3 கிளாஸ் தண்ணீர் ஊற்றி வேகவிட வேண்டும். அதனுடன் வெங்காயத்தை நறுக்கிபோட்டு, கறிவேப்பிலை சேர்த்து மூடிவேகவிடவும்.
வெந்தவுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்புச் சேர்த்து வேகவிடவேண்டும். பொடி வாசனை போகும்வரை கொதிக்கவிட்டு, ஒரு கிளாஸ் தண்ணீரில் கரைத்து விட்டு கொதிக்கவிட வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் தாளித்து கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கி குழம்பை ஊற்றி கொதிக்க விடவேண்டும்.
பூண்டையும், சீரகத்தையும் தட்டிப்போட்டு ஒரு தேக்கரண்டி நெய் விட்டு மூடி இறக்கி பரிமாறவும்.