பச்சப்பருப்பு குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சப்பருப்பு - 1 கோப்பை

வெங்காயம் - 2

தக்காளி - 2

பூண்டு - 6 பற்கள்

புளி விழுது - 2 தேக்கரண்டி

கொத்தமல்லி - ஒரு பிடி

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

தனியா தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

காய்ந்த மிளகாய் - 2

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பச்சப்பருப்பை வெறும் சட்டியில் போட்டு அல்லது குக்கரில் போட்டு வாசனை வரும் வரை நன்கு வறுக்கவும்.

பிறகு மிதமான சுடு தண்ணீரில் கழுவி கொள்ளவும்.

கழுவிய பருப்பை மீண்டும் குக்கரிலேயே போட்டு தாளிப்பு சாமான்களை தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் போட்டு ஊப்பையும் போட்டு நன்கு கலக்கவும்.

பிறகு மிதமான சுடுதண்ணீர் இரண்டரைக் கோப்பை ஊற்றி குக்கரை மூடி வேகவைக்கவும்.

நன்கு வெந்தவுடன் மூடியைத் திறந்து தேவைப்பட்டால் சிறிது நீரை ஊற்றவும். குழம்பு சற்று கெட்டியாக இருந்தால் தான் சுவையாக இருக்கும்.

பிறகு ஒரு சிறிய சட்டியில் எண்ணெயை காய வைத்து தாளிப்பு பொருட்களை போட்டு தாளித்து குழம்பில் கொட்டி கலக்கி விட்டு சூடாக வெள்ளைச் சோற்றுடன் பரிமாறவும்.

குறிப்புகள்: