பசலைக்கீரை குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 2

உருளைக்கிழங்கு - 4

பசலைக்கீரை - ஒரு கட்டு

கருவடாம் - 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 10 இலை

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

தனியா தூள் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகு தூள் - 1 தேக்கரண்டி

பூண்டு - 10 பல்

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், தக்காளி மற்றும் உருளைக்கிழங்கை நறுக்கி கொள்ளவும்.

பசலைக்கீரையை நன்கு ஆய்ந்து சுத்தம் செய்து நறுக்கி வைத்து கொள்ளவும்.

ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கருவடாமை போடவும்.

வெடித்ததும் கறிவேப்பிலை, பூண்டு மற்றும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் சிவக்கும் வரை வதக்கவும்.

பிறகு நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூள், மற்றும் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். 4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

காய்கறி வெந்து குழம்பு சுண்டியவுடன் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: