பக்கோடா குழம்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - ஒரு குழிகரண்டி

கடலை மாவு - 3 குழிகரண்டி

சின்ன வெங்காயம் - 20

தக்காளி - 2

மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி

மல்லித் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

புளி - கோலிகுண்டு அளவு

தண்ணீர் - தேவையான அளவு

கடுகு - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 2 கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியையும் சிறு துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.

அரிசிமாவு, கடலை மாவு, உப்பு, நறுக்கின வெங்காயத்தில் பாதி சேர்த்து தண்ணீர் விட்டு கட்டியாக பிசைந்து கொள்ளவும்.

பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு சூடான பின்பு, மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு போட்டு பொரித்து, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

பிறகு மீதமுள்ள நறுக்கின சிறிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.

வதங்கிய பிறகு வெட்டி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும்.

அத்துடன் ஒன்றரை கரண்டி மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

நன்கு வதங்கிய பிறகு புளிகரைசல் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

ஒரு கொதி வந்தவுடன் செய்து வைத்துள்ள பக்கோடா சேர்த்து சற்று நேரம் கொதிக்க வைத்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: