பக்கோடாக்குழம்பு
தேவையான பொருட்கள்:
பக்கோடா தயாரிக்க:
துவரம்பருப்பு - 200 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 4
சோம்பு (அல்லது) சீரகம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை, மல்லிதழை - தேவையான அளவு
எண்ணெய் - 150 மி.லி
உப்பு - ஒரு தேக்கரண்டி
குழம்பிற்கு தேவையானவை:
புளி - எலுமிச்சை அளவு
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
சோம்பு, சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 10
தக்காளி - 2
பூண்டு - 5 பல்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
துவரம்பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டியில் வடித்துவிட்டு சோம்பு, உப்பு போட்டு அரைக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து பிசையவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பிசறியவற்றை கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளிப் போட்டு முக்கால் பதம் வரை வேகவைத்து எடுக்கவும்.
எல்லாம் வறுத்த பிறகு எண்ணெய் குழம்பிற்கு தேவையானதாக இருந்தால் அதிலே குழம்பு தாளிக்கலாம்.
அதிகமாக இருந்தால் சிறிது எடுத்துவிட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, பூண்டு போட்டு வதக்கவும்.
வதங்கியதும் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
புளியை 2 கிளாஸ் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்கவிடவும். நன்கு கொதித்து குழம்பு சற்று வற்றியவுடன் கீழே இறக்கி வைத்து பொரித்த பக்கோடாக்களை போட்டு மூடி வைக்கவும்.