நேந்திரம்பழ மோர்க்குழம்பு
தேவையான பொருட்கள்:
நன்கு பழுத்த நேந்திரம்பழம் - 1
இலேசாக புளித்த தயிர் - 1 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப் (குவித்து)
பச்சைமிளகாய் - 2
உலர்ந்த மிளகாய் - 2
புளிவிழுது - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 1 அல்லது 2
வெந்தயம் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
துருவியத் தேங்காயுடன் பச்சை மிளகாய், 2 காய்ந்த மிளகாய் சேர்த்து, சிறிது நீரும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
நேந்திரம்பழத்தை ஒரு அங்குலத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
புளிவிழுதை அரைக் கப் தண்ணீரில் கரைத்து அதில் நறுக்கின பழத்துண்டங்களைப் போட்டு, சிறிது உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
பழம் வெந்து மிருதுவானவுடன் அரைத்து வைத்துள்ள விழுதினைச் சேர்க்கவும்.
அவற்றை நன்றாக கலந்து, அத்துடன் அடித்த தயிரை ஊற்றிக் கலக்கவும்.
தீயின் அளவைக் குறைத்து 2 அல்லது 3 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும். மிகவும் கொதிக்க விடக்கூடாது.
பின்னர் இறக்கி, ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு, கடுகு, மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலைப் போட்டுத் தாளித்து, குழம்பில் கொட்டி பரிமாறவும்.