நவரசக் குழம்பு
தேவையான பொருட்கள்:
உரித்த சின்ன வெங்காயம் - 1 கப்
முள்ளங்கி - 1
தக்காளி - 4
புளி - எலுமிச்சை அளவு
மஞ்சள்பொடி - 1 தேக்கரண்டி
தனியாபொடி - 1 1/2 தேக்கரண்டி
காரப்பொடி - 2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 8 தேக்கரண்டி
வதக்கி அரைக்க:
தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
பேரீச்சம்பழம் - 6
முந்திரி பருப்பு - 8
பாதாம் - 8
திராட்சை - 10
பச்சை மிளகாய் - 2
தாளிக்க:
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
புளியை 3 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
தக்காளியை சிறு துண்டுகளாக்கவும்.
முள்ளங்கியை வட்டத் துண்டுகளாக நறுக்கி வேக விட்டு எடுத்து வைக்கவும்.
2 தேக்கரண்டி எண்ணெயில் வதக்கக் கொடுத்துள்ள சாமான்களை சிறிது நேரம் வதக்கவும்.
வதக்கியவற்றை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும்.
நல்லெண்ணெயை வாணலியில் ஊற்றி காய்ந்ததும் அதில் சீரகம், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, அதிலேயே உரித்த வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதில் நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
தக்காளி நன்றாக வெந்து சேர்ந்து கொண்டதும் அதில் மஞ்சள் பொடி, தனியா பொடி, காரப்பொடி சேர்த்து நன்கு கிளறவும்.
எண்ணெய் பிரிந்ததும் அதில் புளிக்கரைசலை விடவும்.
வெந்த முள்ளங்கியை சேர்க்கவும். தேவையான உப்பு சேர்க்கவும். சற்று கொதித்து புளிவாசனை போனதும், அரைத்த விழுதைச் சேர்க்கவும்.
நன்கு கொதித்து குழம்பு பதம் வந்ததும் இறக்கவும். வித்யாசமான சுவையில்.
குறிப்புகள்:
இதில் முள்ளங்கிக்கு பதிலாக முருங்கை, உருளை, கத்தரி சேர்த்தும் செய்யலாம். முருங்கை மற்றும் கத்தரிக்காயை புளி கரைத்து விட்டபின் நேரடியாக சேர்க்கவும். முன்னால் வேகவிட வேண்டாம்.
கொத்தமல்லி தழை சேர்த்து சாதத்துடன் சாப்பிடவும்.