தேங்காய் பால் குழம்பு (1)
தேவையான பொருட்கள்:
தேங்காய் - 1
உருளைகிழங்கு - 300 கிராம்
பச்சை மிளகாய் - 4
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி
கருவா - சிறிது
ஏலம் - 2
கிராம்பு - 3
எழுமிச்சைபழம் - பாதி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் தேஙகாயைதுருவி கெட்டியாக பால் எடுத்து தனியாகவைக்கவும்.
இரண்டாவது பால் எடுத்து தனியாகவைக்கவும்.
உருளைகிழங்கை தோல் எடுத்து நறுக்கிக்கொள்ளவும்.
பச்சைமிளகாயை அரைத்துக்கொள்ளவும்.
இரண்டாவது பாலில் பச்சை மிளகாய், சீரகத்தூள்,கொத்தமல்லிதூள்,உப்பு,போட்டு கலக்கி உருளைகிழங்கை சேர்த்து வேகவைக்கவும்.
வெந்ததும் கெட்டிப்பாலையும் ஊற்றவும் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கொதித்து குழம்பு கெட்டியானதும் இறக்கவும்.
பின் அடுப்பில் சட்டியைவைத்து எண்ணெய் ஊற்றி கருவா,ஏலம்,கிராம்பு போட்டு தாளித்து காய்கறிக்கலவையில் கொட்டவும்.
எழுமிச்சைபழம் பிழிந்து ஊற்றவும்