தேங்காய் பால் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பீன்ஸ் - 10

கேரட் - 2

உருளை - 2

பெரிய வெங்காயம் - 2

முருங்கைக்காய் - 1

கத்தரிக்காய் - 2

பூண்டு உரித்தது - 1 கப்

பச்சை மிளகாய் - 4

தேங்காய் - அரை மூடி

பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

வெந்தயம் - அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - சிறிது

செய்முறை:

காய்களை 1 1/2 இன்ச் நீள துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

தேங்காயை துருவி 2 முறை பால் எடுக்கவும்.

பச்சை மிளகாய், பொட்டுக்கடலை இவற்றை எண்ணெய் விட்டு வதக்கி அரைத்து வைக்கவும்

இரண்டாம் பாலை விட்டு காய்களை குக்கரில் வெயிட் போடாமல் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

காய்கள் வெந்ததும் அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய், பொட்டுக்கடலை விழுதினை நன்றாக கரைத்து விடவும்.

கலவை கெட்டியானதும் முதல் பாலை சேர்க்கவும். ஒரு தேக்கரண்டி எண்ணெயில் வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.

குறிப்புகள்:

முதல் பாலை சேர்த்ததும் அடுப்பை அணைத்து விடவும். கொதிக்க வைக்க கூடாது, திரிந்துவிடும். சாதம், சப்பாத்தி, நாண், பட்டூரா போன்றவைகளுக்கு சைட்டிஷாகவும் வைக்கலாம்.