தேங்காய் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தேங்காய் - 2 மூடி (துருவிக் கொள்ளவும்)

வட்டவடிவமாக வெட்டிய சின்ன வெங்காயம் - 1/2 கப்

நீளமாக வெட்டிய பச்சை மிளகாய் - 3

கறிவேப்பிலை - 1 இனுக்கு

அரைக்க:

சிவப்பு மிளகாய் - 5

சீரகம் - 1 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

செய்முறை:

தேங்காய் துருவல் ,சோம்பு, சீரகம், வத்தல் சேர்த்து நன்றாக அரைத்து பால் எடுக்கவும்.

இரண்டு முறை பால் எடுக்கவும்.

வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு போட்டு தளித்து கறிவேப்பிலை போடவும்.

அதனுடன் வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

பின் தேங்காய்பாலை சேர்த்து உப்பு போடவும்.

ஒரே ஒரு கொதிவந்ததும் இறக்கிவிடவும். நிறைய நேரம் கொதிக்கக் கூடாது.

குறிப்புகள்: