தேங்காய்ப்பால் வெள்ளை பூசணி குழம்பு

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வெள்ளை பூசணி - 1/2

தேங்காய் பால் - 2 கப்

பெரிய வெங்காயம் - 1

இஞ்சி - சிறிது

மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி

தனியா தூள் - 3 மேசைக்கரண்டி

பச்சை மிளகாய் - 2 (அல்லது) 3

கருவேப்பிலை, கொத்துமல்லி - சிறிது

கடுகு - 1/4 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தையும் இஞ்சியும் நீளமாக மெலிசாக அரிந்து கொள்ளவும்.

பூசணியை நீளமாக அரிந்து கொள்ளவும்.

பூசணி,வெங்காயம்,இஞ்சி,மிளகாய்த்தூள்,தனியா தூள்,கருவேப்பிலையை சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு கலந்து 1/2 மணி நேரம் ஊற விடவும்.

வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளிக்கவும்.

பச்சை மிளகாய் சேர்க்கவும்.இதில் ஊறிய கலவையை சேர்த்து தண்ணீர் ஊற்றி பூசணியை வேக விடவும்.தேவையான உப்பு சேர்க்கவும்

காய் வேந்தவுடன் தேங்காய்ப்பால் சேர்க்கவும். கொத்துமல்லி தூவி இறக்கவும்.

குறிப்புகள்: