தீயல் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் - 100 கிராம்

முருங்கைக்காய் - 1

தேங்காய் துருவல் - 1/2 கப்

சின்ன வெங்காயம் - 10

மிளகு - 1 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 5

தனியா - 3 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 3 கொத்து

புளி - 1 எலுமிச்சை அளவு

நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு:

நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி

மெல்லியதாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 3

கடுகு - 1 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

கத்தரிக்காய், முருங்கைக்காயை துண்டுகளாக்கவும். வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து தனியே வைக்கவும்.

அதே வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு 5 சின்ன வெங்காயம், கத்திரிக்காய், முருங்கைக்காய் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

புளிக்கரைசல் தண்ணீர் உப்பு சேர்த்து மூடி போட்டு வேக விடவும். இன்னொரு வாணலியில் 3 தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு மிளகை போட்டு வெடிக்க விடவும்.

மிளகு வெடித்ததும் மிளகாய் வற்றல், தனியா, கறிவேப்பிலை, 5 சின்ன வெங்காயம் சேர்த்து 3 நிமிடம் வறுக்கவும்.

இப்போது தேங்காய் துருவல் சேர்த்து தேங்காய் டார்க் பிரவுன் நிறமாகும் வரை வறுக்கவும்.

வறுத்த பொருட்களை தண்ணீர் விட்டு மையாக அரைக்கவும். காய் வெந்ததும் அரைத்த கலவை சேர்த்து உப்பு, புளி, காரம் சரி பார்க்கவும்.

நன்றாக கொதித்ததும் மூடி வைத்து குறைந்த தனலில் 5 நிமிடம் கொதிக்க விடவும்.

தாளித்த கலவையை குழம்பில் கொட்டி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

சாதத்துடனும், இட்லி, தோசையுடனும் சுவையாக இருக்கும்.