தீயல்
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 1
தேங்காய்த் துருவல் - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 10
மிளகு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 5
தனியா - 3 தேக்கரண்டி
பூண்டு - 6 பற்கள்
கறிவேப்பிலை - 3 கொத்து
புளி - எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
மெல்லியதாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 3
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் 5 சின்ன வெங்காயம், கத்தரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும். (உருளைக்கிழங்கை நன்கு கழுவி தோலுடன் சேர்ப்பது நல்லது. அதிலுள்ள உள்ள வாயு குறையும்).
அதனுடன் புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்த்து மூடி போட்டு 5 நிமிடங்கள் வேகவிடவும்.
மற்றொரு வாணலியில் 3 தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு, மிளகைப் போட்டு வெடிக்கவிடவும். மிளகு வெடித்ததும் மிளகாய் வற்றல், தனியா, கறிவேப்பிலை, 5 சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும். கடைசியாக தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும். வதக்கியவற்றை தண்ணீர் ஊற்றி மையாக அரைக்கவும்.
காய் வெந்ததும் அரைத்த கலவையைச் சேர்த்து உப்பு, புளி, காரம் சரி பார்க்கவும். நன்றாக கொதித்ததும் மூடி வைத்து குறைந்த தீயில் 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து தாளித்து, தீயலில் சேர்க்கவும்.
சுவையான தீயல் தயார்.
குறிப்புகள்:
சாதத்துடனும், இட்லி, தோசையுடனும் சாப்பிடச் சுவையாக இருக்கும்.
சேனைக்கிழங்கு, முருங்கைக்காய், வெண்டைக்காய், பாகற்காய் பயன்படுத்தியும் செய்யலாம். கொண்டைக்கடலையை (சன்னா) குக்கரில் வேக வைத்து சேர்த்தும் செய்யலாம். காய் எதுவும் இல்லாவிட்டாலும் சுண்டைக்காய் வற்றல் (எண்ணெயில் வறுத்து சேர்க்க வேண்டும்), கொண்டைக்கடலை சேர்த்துச் செய்யலாம். தனியாக பூண்டு போட்டும் செய்யலாம்.
இந்த குழம்பு தினமும் சூடாக்கி வைத்தால் ஃப்ரிட்ஜ் இல்லாமலும் ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம். பயணத்திற்கு எடுத்து செல்ல ஏற்றது.